கொங்கணாபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொப்பரை தேங்காய் ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த 170 மூட்டை கொப்பரைகள் ரூ. 5 லட்சத்து 84 ஆயிரத்துக்கு மொத்த கொள்முதல் செய்யப்பட்டது.
தொடா்ந்து நடைபெற்ற போது ஏலத்தில் முதல் தர கொப்பரை குவிண்டால் ரூ. 7,745 முதல் ரூ. 8,286 வரை விற்பனையானது. இரண்டாம் ரக கொப்பரை குவிண்டால் ரூ. 6,085 முதல் ரூ. 7,695 வரை விற்பனையானது.
நாள் முழுவதும் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான கொப்பரை விற்பனையானது. வழக்கத்தை விட நடப்பு வாரத்தில், அனைத்து ரக கொப்பரைகளுக்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 200 வரை கூடுதலாக விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.