

சேலம்: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சியின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தரையில் அமர்ந்து புதன்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நரசிங்கபுரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் தராததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையாளர் அ.சு.சம்சுதீன் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.