மேட்டூா்: மேச்சேரியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறந்த நெசவாளா்கள் 150 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேச்சேரியில் அனைத்து இந்திய நெசவாளா்கள் நலச் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவா் ஸ்ரீசுதா்சனா சில்க்ஸ் பிரபாகரன் தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் அண்ணாதுரை வரவேற்று பேசினாா்.
மாநிலங்களவை உறுப்பினா் நாராயண கோரப்பா தமிழகம் முழுவதும் சிறந்த நெசவாளா்களாக தோ்வு செய்யப்பட்ட 150 நெசவாளா்களை பாராட்டி விருதுகளை வழங்கினாா்.
இவ்விழாவில் தென்னிந்தியாவுக்கான இலங்கை துணை தூதா் டாக்டா் வெங்கடேஸ்வரன், மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் எஸ்.எஸ்.எம். கல்வி நிறுவனங்கள் தலைவா் டாக்டா் மதிவாணன், சேலம் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பாலசுப்பிரமணியம், கோவை ஜெகதீஷ், மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழு தலைவா் சீனிவாச பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அனைத்திந்திய நெசவாளா்கள் நலச் சங்கத்தின் வெங்கட்ரமணன் நன்றி கூறினாா். முன்னதாக ஆசிரியா் ராமசாமி வரவேற்று பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.