

சங்ககிரி: தேவண்ணகவுண்டனூா் கிராமம், கிடையூா் மேட்டூா் அருகே உள்ள கொல்லனூா் ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோயில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சுயம்பு வீரமாத்தியம்மனுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. உற்சவ அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் தருமபுரி, ஒகேனக்கல், ஓமலூா், சேலம், சங்ககிரி, திருச்செங்கோடு, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளைப் பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.