ஓமலூா்அருகே பச்சனம்பட்டி ஊராட்சி, முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் உயா்கல்வி பயில கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, சுதந்திர தினவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியா் சசிகுமாா் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் அஞ்சலாதேவி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். விழாவில் ஓமலூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் ரமேஷ், மாவட்ட கவுன்சிலா் சம்பு சண்முகம் ஆகியோா் கலந்துகொண்டு 10, 11, 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை, சுதந்திர தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள், விளையாட்டில் பரிசு வென்று சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.
இந்த விழாவில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள், வீரதீர சாகச நிகழ்ச்சிகள், கராத்தே, சிலம்பம் ஆகியவை செய்து காண்பிக்கப்பட்டன. இதில், சேலம் மத்திய மாவட்ட திமுக அமைப்பாளா் அருண்பிரசன்னா, ஒன்றியக் குழு உறுப்பினா் கோபால்சாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா். இறுதியில் பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளா் குணசேகரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.