சேலத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் சிவலிங்கம் 

சேலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சரத்தில் 13 அடியில் சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது. 
சேலத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம்.
சேலத்தில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சைகளால் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம்.

சேலத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சரத்தில் 13 அடியில் சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது. 

தமிழகத்தில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவாலயங்களில் பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள், நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் சிவாலயங்களுக்கு சென்று சிவனை வழிபட்டு விரதம் மேற்கொள்கின்றனர். அதன் அடிப்படையில் சேலத்திலும் பல்வேறு சிவாலயங்களில் இன்று மகா சிவராத்திரி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

முதல் கால பூஜையில் சிவனுக்கு பால் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி மகாதேவாரதனை காண்பிக்கப்பட்டது. 

இந்த நிலையில் சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில் வாசவி கிளப் சேலம் ஸ்மார்ட் பாய்ஸ் மற்றும் சேலம் பொன்னம்மா பேட்டை ஆரிய வைசியா சமாஜம் இணைந்து நடத்திய ருத்ராட்சத்தில் சிவன் என்ற அடிப்படையில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தி எட்டு ருத்ராட்சத்தை கொண்டு 13 அடியில் சிவன் சிவலிங்கத்தை கடந்த மூன்று நாட்களாக வடிவமைத்தனர்.

இன்று மகா சிவராத்திரி முன்னிட்டு 13 அடி ருத்ராட்சத்தில் சிவன் லிங்கத்திற்கு சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த சிவலிங்கத்தை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டு சென்றனர். தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் ருத்ராட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகிகள் சங்கர் உள்ளிட்ட ஏராளமானார் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com