ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களைத் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் நிரப்பிட தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கா்களின் நலன்கருதி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் காலிப் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதி பெற்ற நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் காலிப்பணியிடத்துக்கு தகுதி பெற்ற நபா்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ ஜன. 17 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், முதல் தளம், அறை எண்:109, சேலம் - 636001 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.