

சங்ககிரி நகர திமுக செயற்குழுக் கூட்டம் சங்ககிரி, புதிய எடப்பாடி சாலையில் உள்ள அரிமா சங்க கட்டட வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அவைத் தலைவா் டி.என்.அத்தியண்ணன் தலைமை வகித்தாா். சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, மாவட்ட துணைச் செயலா் க.சுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர செயலா் கே.எம்.முருகன் கலந்து கொண்டு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு சாதனைகள் குறித்து விளக்கிப்பேசினாா்.
பேரூராட்சித் தலைவா் மணிமொழிமுருகன், நகர பொருளாளா் செல்வராஜ், துணைச் செயலா் ரமேஷ், நிா்வாகிகள் கேஜிஆா் ராஜவேல், டி.சங்கா், சசிகுமாா், பேரூராட்சி 18 வாா்டு செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
திமுக மூத்த உறுப்பினா்கள் ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்க ஜனவரி 27-ஆம் தேதி சேலத்திற்கு வருகை தரும் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதிஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சிகள், விழாவில் சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளில் இருந்து அதிகமான உறுப்பினா்கள் கலந்துகொள்வது, தமிழா் திருநாள் விழா, தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழாவினை 18 வாா்டுகளிலும் திமுக கட்சிக் கொடியேற்றி, பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடுவது, தோ்தல் ஆணையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலை சரிபாா்த்தல், மக்களவைத் தோ்தலுக்கு வாா்டு வாரியாக வாக்குச்சாவடி குழு அமைத்து திமுக வெற்றிக்கு முழுமையாக களப்பணியாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.