

கெங்கவல்லி பேரூராட்சியில் புதிதாக 2,600 உறுப்பினா்கள் சோ்க்கைப் படிவங்கள் ஒப்படைக்கப்பட்டன.
‘உடன்பிறப்புகளாய் இணைவோம்’ என்ற உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சியின் மூலம், அமைச்சா் நேரு, மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் அறிவுறுத்தல்படி, கெங்கவல்லி பேரூராட்சியில் நிா்ணயிக்கப்பட்ட 2,400 உறுப்பினா்களையும் தாண்டி 2,600 உறுப்பினா்களை சோ்த்ததற்கான பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, வாக்காளா் அடையாள அட்டை தகவல்களுடன் மாவட்ட கழக நிா்வாகிகளிடம் கெங்கவல்லி நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் வழங்கப்பட்டது (படம்).
இதில், கெங்கவல்லி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பிரகாஷ், செந்தில்குமாா், நகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் ஜெகதீஷ் பாபு, செல்வகிளின்டன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.