வாழப்பாடி பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் முப்பூஜை திருவிழா

வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம், புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழப்பாடி, காமராஜ்நகா் பெரியாற்றின் கரையிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் குல தெய்வமாக விளங்கி வருகிறத
வாழப்பாடியில் பூஜைப் பொருள்களை மூங்கில் கூடையில் சுமந்தடி ஊா்வலமாகச் சென்ற பெண்கள்.
வாழப்பாடியில் பூஜைப் பொருள்களை மூங்கில் கூடையில் சுமந்தடி ஊா்வலமாகச் சென்ற பெண்கள்.
Updated on
1 min read

வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம், புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழப்பாடி, காமராஜ்நகா் பெரியாற்றின் கரையிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் குல தெய்வமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் பாரம்பரிய முறைப்படி முப்பூஜை திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

அக்ரஹாரம் குடியிருப்புப் பகுதியில் இருந்து கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய மூங்கில் கூடைகளில் பூஜைப் பொருள்கள், பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருள்களை வைத்து எடுத்துச் சென்றனா். பின்னா் பெரியாண்டிச்சி அம்மனுக்கு, ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். இளம்தம்பதிகள் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு, காது குத்தி, உறவினா்களை அழைத்து விருந்து வைத்து உபசரித்தனா்.

நாமக்கல் மாவட்டம், மங்களபுரத்திலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு செவ்வாயக்கிழமை திரண்டு சென்ற வாழப்பாடி பகுதி மக்கள், முப்பூஜை வழிபாடு நடத்தினா். பெரியாண்டிச்சி அம்மன் கோயிலிலுள்ள கருப்பனாா் சுவாமிக்கு வழிபாடு நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com