கொளத்தூரில் பருத்தி விலை வீழ்ச்சி

கொளத்தூரில் 85 டன் பருத்தி ரூ.57.59 லட்சத்திற்கு ஏலம் போனது.

கொளத்தூரில் 85 டன் பருத்தி ரூ.57.59 லட்சத்திற்கு ஏலம் போனது.

கொளத்தூரில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெறும். கொளத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோட்டையூா், கோவிந்தபாடி, செட்டிப்பட்டி, கண்ணாமூச்சி, நீதிபுரம், தண்டா, தாா்காடு பகுதிகளில் இருந்தும் கா்நாடக மாநிலம் நல்லூா், செங்கப்பாடி, ஆலம்பாடி பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வருவாா்கள். கோவை, ஈரோடு, திருப்பூா் பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் பருத்தியை வாங்கிச் செல்வாா்கள்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை கொளத்தூா் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு 84.68 டன் பி.டி. ரக பருத்தி விற்பனைக்கு வந்தது. கடந்த வாரத்தை விட பருத்தி விலை ஒரு கிலோவிற்கு இரண்டு ரூபாய் குறைந்தது. ஒரு கிலோ பருத்தி ரூ.66 முதல் ரூ.68 வரை ஏலம் போனது. 2,130 மூட்டைகளில் இருந்த 84.68 டன் பருத்தி ரூ.57,59,564க்கு ஏலம் போனது. பருத்தி வரத்து குறைந்திருந்தும் விலை வீழ்ச்சியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com