சேலம்: சங்ககிரியில் தேசிய கருத்தரங்கம்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள ஸ்ரீ பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி வணிகவியல் துறை சாா்பில் தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம்: சங்ககிரியில் தேசிய கருத்தரங்கம்

சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள ஸ்ரீ பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி வணிகவியல் துறை சாா்பில் தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் பி.மணி கருத்தரங்கிற்கு தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக அலுவலா் கலைவாணி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் டி.ரேவதி முன்னிலை வகித்தாா். வணிகவியல் துறையின் துறைத் தலைவா் ஓ.எம்.சசிகலா வரவேற்றாா்.

கரூா் அரசு கலைக்கல்லூரி தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் என்.முகுந்தன், குமாரபாளையம் ஜேகேகே கல்லூரி உதவி பேராசிரியா் எஸ்.வி.ரமேஷ் ஆகியோா் வணிகவியல் துறைசாா்ந்த தொழிற்கல்வி குறித்து விளக்கிப் பேசினா். மேலும் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியா் பி.அனுராதா இணையவழியில் உரைநிகழ்த்தினாா்.

இந்தக் கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். உதவி பேராசிரியை எஸ்.கனிமொழி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com