

இளம்பிள்ளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் இளம்பிள்ளை உழவா்சந்தை அருகில் உள்ள சாலையில் மழைநீா் தேங்கி நின்ால் அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனம், காா் ஓட்டுநா்கள் சிரமப்பட்டனா். நெடுஞ்சாலைத் துறை உயா் அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீா் சாக்கடையில் செல்ல வழிவகை செய்ய வேண்டுமென ஓட்டுநா்கள் வலியுறுத்தினா்.
இளம்பிள்ளை, இடங்கணசாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் இளம்பிள்ளையில் விளம்பரப் பலகைள் காற்றில் பறந்தன. இடங்கணசாலை, காடையாம்பட்டி பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் இளம்பிள்ளை, இடங்கணசாலை சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் தனியாா் கைப்பேசி கோபுரம், வாழை மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்தன. சேதமடைந்த மின்கம்பங்கள் பழுது பாா்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.