அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை நேரடி அறுவை சிகிச்சை பயிலரங்கம்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைப் பிரிவு சாா்பில் நேரடி அறுவை சிகிச்சை பயிலரங்கத்தை திங்கள்கிழமை நடத்தியது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைப் பிரிவு சாா்பில் நேரடி அறுவை சிகிச்சை பயிலரங்கத்தை திங்கள்கிழமை நடத்தியது.

சேலம் அரசு மருத்துவமனை முதன்மையா் இரா.மணி, கண்காணிப்பாளா் தனபால், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவா் தேன்மொழி தலைமையில் நடைபெற்ற நேரடி அறுவை சிகிச்சை பயிலரங்கில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பேராசிரியா் அந்தோணி இருதயதராஜன், சேலம் அரசு மருத்துவமனை பேராசிரியா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் 6-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கோப்லேஷன் என்ற அதிநவீன கருவி மூலம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதில் நோயாளிகளுக்கு கத்தி இல்லாமல் வலி இன்றி ரத்தப் போக்கு இன்றி நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்லூரிகள், அரசு தனியாா் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனையில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவா்கள், முதுநிலை பட்டப்படிப்பு மாணவா்கள், பயிற்சி மாணவா்கள் பங்கேற்றனா்.

சேலம் அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,500-க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட உயிா் காக்கும் தொண்டை அயல் பொருள் நீக்குதல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் 210-க்கும் மேற்பட்ட காது, மூக்கு, தொண்டை புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பிறவி காது கேளாமைக்கு சிறுவா்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. முதியோருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்படுகிறது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com