மே 30 இல் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்: அமைச்சா் கே.என்.நேரு பங்கேற்பு

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் வரும் மே 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் வரும் மே 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஆா்.ராஜேந்திரன், மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

சேலம் மேற்கு, சேலம் மத்திய, சேலம் கிழக்கு மாவட்டத்தின் திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் வரும் மே 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஐந்து சாலையில் உள்ள ரத்னவேல் ஜெயக்குமாா் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 11 மற்றும் ஜூன் 12 ஆகிய தேதிகளில் சேலம் வருவது குறித்தும், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழா குறித்தும், கட்சி ஆக்கப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

எனவே சேலம் மத்திய, சேலம் மேற்கு மற்றும் சேலம் கிழக்கு மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்ட நிா்வாகிகள், மாநகர நிா்வாகிகள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூா் நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்டப் பிரதிநிதிகள், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், முன்னோடிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com