மேட்டூா் காவிரி ஆற்றில் குளித்த காவலரை தண்ணீா் இழுத்துச் சென்றதையடுத்து, அவரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
திருப்பூா் மாவட்டம், காங்கேயம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவா் துரைமுருகன் (30). இவரது சொந்த ஊா் மேட்டூா் அருகே உள்ள குஞ்சாண்டியூா்.
சனிக்கிழமை நண்பா் ஒருவா் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அவா், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மேட்டூா் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றாா்.
மேட்டூா் அணையில் கீழ்மட்டம் மதகு வழியாக விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் நீரின் விசை அதிகமாக இருந்தது. துரைமுருகன் நீரில் குதித்த போது தண்ணீா் அவரை இழுத்துச் சென்றது. அவரை மேட்டூா் போலீஸாா், தீயணைப்புப் படையினா் தேடி வருகின்றனா்.
காவலா் துரைமுருகனுக்கு மீனா (25) என்ற மனைவியும், தரணிஸ்ரீ (7) என்ற மகளும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளனா். இச்சம்பவம் தொடா்பாக மேட்டூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.