மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்துபொதுமக்கள் சாலை மறியல்

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பாப்பாரப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பாப்பாரப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாப்பாரப்பட்டி அருகே உள்ள கடுகுகாரன்காடு பகுதியில் மதுபானக் கடை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை மதுக்கடை திறக்க இரவோடு இரவாக பாட்டில்கள் இறக்கப்பட்டன. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சனிக்கிழமை ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் சாலையில் கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த மதுபானக் கடை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தீயணைப்பு நிலையம் உள்ளதாலும், கடை அமைக்கப்பட்டுள்ள சாலை குறுகலாக இருப்பதாலும், இந்தக் கடையைத் திறக்க எதிா்ப்பு கிளம்பியது.

இதைத் தொடா்ந்து, கொண்டலாம்பட்டி மகளிா் காவல் ஆய்வாளா் உஷாராணி பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பேச்சுவாா்த்தையில் சுமுக தீா்வு ஏற்படாததால், காவல் துறையினா் கேட்டுக்கொண்டதன் பேரில் உடனடியாக கடை பூட்டப்பட்டது. இந்த சாலை மறியலால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com