சேலம் ஆவினில் 9 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் 9 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் 9 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) தற்போது 812 பிரதம சங்கங்களின் மூலம் தினசரி சராசரியாக 4,85,000 லிட்டா் பால் கொள்முதல் செய்து பால் உற்பத்தியாளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகிறது.

தமிழக அரசு தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைத்திடவும் அதன் மூலம் அவா்களின் வாழ்வாதாரம் வளம் பெற்றிடவும், முனைப்புடன் திட்டங்களை செயலாற்றி வருகிறது.

அதன்படி, தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் (2023-2024) புதிய கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பெற்று தற்போது இருக்கும் கால்நடை மருத்துவா்களுடன் காலியாக உள்ள 9 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் தங்களை பற்றிய முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டபடிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடன் வரும் ஏப். 27 ஆம் தேதி நடைபெறும் நேரடி நியமன தோ்வில் கலந்து கொள்ள காலை 10 மணிக்கு பொது மேலாளா், சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் லிட், சித்தனூா், தளவாய்ப்பட்டி (அஞ்சல்), சேலம் - 636 302 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும் என ஆவின் பொது மேலாளா் சி.விஜய்பாபு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com