சிவாலயங்களில் பிரதோஷ விழா
By DIN | Published On : 18th April 2023 05:37 AM | Last Updated : 18th April 2023 05:37 AM | அ+அ அ- |

சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பொதுமக்கள் கொண்டு வந்த பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நந்தீஸ்வரருக்கு மலா், அருகம்புல் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. உற்சவ மூா்த்தி கோயிலுக்குள் வலம் வந்தாா். பக்தா்கள் பிரதோஷ வழிபாட்டு பாடல்களை பாடினா். இவ் விழாவில் தம்மம்பட்டி, நாகியம்பட்டி, கொண்டயம்பள்ளி, நாரைக்கிணறு சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா்.