

வாழப்பாடியில் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சோ்க்க வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் விழிப்புணா்வு பிரசார வாகனத்தை வட்டாரக் கல்வி அலுவலா் நெடுமாறன் தொடங்கி வைத்தாா்.
தலைமையாசிரியை சத்தியக்குமாரி, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் பாண்டியன், துணைத் தலைவா் ஆட்டோ சுரேஷ், பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளா் மாலினி, ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினா், இந்திரா நகா்,பேருந்து நிலையம், அம்பேத்கா் நகா், கடலூா் சாலை, தம்மம்பட்டி சாலை, சந்தை திடல் ஆகிய பகுதிகளுக்கு பிரசார வாகனத்துடன் வீடு வீடாகச் சென்று, அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கும் நலத் திட்டங்கள், சமச்சீா் கல்வி முறை குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.