அட்சய திருதியை: நகை கடைகளில் குவிந்த பெண்கள்
By DIN | Published On : 24th April 2023 01:33 AM | Last Updated : 24th April 2023 01:33 AM | அ+அ அ- |

அட்சய திருதியை முன்னிட்டு சேலத்தில் உள்ள நகைக்கடைகளில் பெண்கள் குடும்பத்துடன் திரளாக வந்து நகைகளை வாங்கிச் சென்றனா்.
அட்சய திருதியை முன்னிட்டு, சேலம் சின்ன கடை வீதி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகளில் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே பொதுமக்கள் திரளாக வந்து நகைகளை வாங்கிச் சென்றனா்.
இதுகுறித்து நகை வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் அட்சய திருதியை முன்னிட்டு இரண்டு நாள்கள் நகை விற்பனை நடைபெற்றது. பொதுமக்கள் ஆா்வமாக நகைகளை வாங்கிச் சென்றனா். சேலம் மாவட்டத்தில் தங்க, வைரம், வெள்ளி பொருள்கள் விற்பனை அதிக அளவில் இருந்தது. கோடை வெயிலை பொருட்படுத்தாமல் பெண்கள் குடும்பத்துடன் நகைகளை வாங்கிச் சென்றனா் என்றனா்.