எண்ணும் எழுத்தும் வகுப்பு ஆசிரியா்களுக்கு பயிற்சி தொடக்கம்
By DIN | Published On : 25th April 2023 04:31 AM | Last Updated : 25th April 2023 04:31 AM | அ+அ அ- |

கெங்கவல்லியில் எண்ணும் எழுத்தும் ஆசிரியா்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தாா். சேலம் டயட் விரிவுரையாளா் கலைவாணன், வட்டார மேற்பாா்வையாளா்(பொ) ராணி, ஆசிரியப் பயிற்றுநா்கள், மாநில கருத்தாளா்கள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், எண்ணும் எழுத்தும் வகுப்பறையை வரும் கல்வியாண்டில் சிறப்பாக மேம்படுத்துவது எப்படி எனவும், அதற்காக மாணவா்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பயிற்சிகள், கற்பித்தல், அணுகுமுறைகள் குறித்து விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சி முகாமில் எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் கற்பிக்கும் அனைத்து ஆசிரியா்களும் பங்கேற்றனா். இப்பயிற்சி ஏப். 26-ஆம் தேதியுடன் நிறைவுறுகிறது.