திரெளபதியம்மன் கோயில் குடமுழுக்கு

சேலம் மாவட்டம், வாழப்பாடி திரெளபதியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திரெளபதியம்மன் கோயில் குடமுழுக்கு

சேலம் மாவட்டம், வாழப்பாடி திரெளபதியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடியில் பிரசித்தி பெற்ற அக்ரஹாரம் திரெளபதியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 24 ஆண்டுகள் நிறைவடைந்ததால், வண்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை தீா்த்தக்குடம், முளைப்பாரி ஊா்வலமும், திங்கள்கிழமை அதிகாலை கணபதி ஹோமம், தொடா்ந்து யாகசாலை பூஜைகளும், காலை 9 மணியளவில் குடமுழுக்கு விழாவும் வெகுவிமரிசையாக நடைபெற்றது (படம்).

இவ்விழாவில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனா். பக்தா்கள், பொதுமக்களுக்கு அக்ரஹாரம் அம்மன் குழுவினா் சாா்பில் அன்னதானமும், சிங்கிபுரம் ராம்கோ நிறுவனம் சாா்பில் நீா்மோரும் வழங்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை முதல் மே 7 வரை மண்டலாபிஷேக பூஜைகளும், மே 8-ஆம் தேதி செல்வமுத்து மாரியம்மன், திரெளபதியம்மன் கோயில்களில் சங்காபிஷேக பூஜைகளும் நடைபெறுகின்றன. இதனைத் தொடந்து, ரதம் படித்து பாரம்பரிய முறைப்படி மே 23 -ஆம் தேதி திரெளபதியம்மன் கோயில் தீமிதித் திருவிழா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com