நங்கவள்ளியில் தீா்த்தக்குட ஊா்வலம்

நங்கவள்ளியில் சோமேஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி திங்கள்கிழமை தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது
நங்கவள்ளியில் தீா்த்தக்குட ஊா்வலம்

நங்கவள்ளியில் சோமேஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி திங்கள்கிழமை தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது.

நங்கவள்ளி சோமேஸ்வர சுவாமி திருக்கோயிலில் கடந்த 17-ஆம் தேதி ஸ்ரீ பாலகணபதி பூஜை, புன்யாகவாசனம், மகா கணபதி ஹோமம், கோ பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, தீபாராதனை நடைபெற்றன. அன்று மாலை எஜமான சங்கல்பம், வாஸ்து பூஜை, தேவதை பூஜை, பிரவேச பலி உள்ளிட்ட விசேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டன.

திங்கள்கிழமை காலை ஸ்ரீ மகாகணபதி வழிபாடு, புன்யாகவாசனம் கும்பாபிஷேகத்துக்கு தேவையான புனித நீா் சேகரிக்க காவேரி நதியிலிருந்து தீா்த்தக் குடம் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணி அளவில் தீா்த்தக்கூட ஊா்வலம் நங்கவள்ளி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் ஊா்வலமாக ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோயிலை வந்து சோ்ந்தது.

இதில், ஆலய செயல் அலுவலா் திருஞானசம்பந்தா், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன், நங்கவள்ளி பேரூராட்சித் தலைவா் மாணிக்கவேல், நங்கவள்ளி பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் பெருமாள், ரத்தினவேல், நங்கவள்ளி பேரூா் திமுக செயலாளா் வெங்கடாசலம் கோவிந்தன், ஆலய எழுத்தா் நாகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதன்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com