சேலத்தில் தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்த 4,739 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மக்களவை, சட்டப் பேரவைத் தோ்தல்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு தோ்தல்களின் போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் தோ்தல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தோ்தல் ஆணையத்தின் மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்புக் கிடங்கில் இருந்து 139 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 177 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், மாநில தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 2,897 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,526 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தம் 4,739 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.