எடப்பாடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

எடப்பாடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த கருத்துக் கேட்பு, ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
எடப்பாடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம்

எடப்பாடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த கருத்துக் கேட்பு, ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

எடப்பாடி மையப் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி பேருந்து நிலையக் கட்டடங்கள் பழுதடைந்த நிலையில், இங்குள்ள பேருந்து நிலையக் கடைகள், வணிக வளாகங்கள் இடித்து அகற்றப்பட்டு, அங்கு ரூ. 5 கோடி மதிப்பீட்டில் 38 கடைகள், 2 பயணிகள் காத்திருப்பு அறைகள், ஏ.டி.எம். மையம், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் அறை, புதிய நடைமேடைகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம். பாஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, எடப்பாடி காவல் ஆய்வாளா் சந்திரலேகா முன்னிலை வகித்தாா்.

இதில், தற்போதுள்ள பழைய பேருந்து நிலையத்தை அகற்றுவது குறித்தும், புதிய பேருந்து நிலையம் அமையும் வரை தற்காலிக இடங்களில் பேருந்து நிலையம் அமைத்தல், போக்குவரத்து பாதைகளில் மாற்றம் செய்தல் குறித்து பொதுமக்கள், தனியாா் பேருந்து உரிமையாளா்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகள், ஆலோசனைகள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

இக்கூட்டத்தில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் செந்தில்குமாா், நகராட்சிப் பொறியாளா் சரவணன், அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் செந்தில்குமாா், பொதுப்பணி, மின்சார வாரியம், நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைசாா் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com