தம்மம்பட்டி பகுதியில் இரு நாள்களாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை சரியத் தொடங்கியுள்ளது.
தம்மம்பட்டி தக்காளி மண்டிகளுக்கு திருச்சி மாவட்டம், பாதா்பேட்டை, மங்கப்பட்டி, கொப்பம்பட்டி, முருங்கப்பட்டி, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை கிராமங்கள், முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, நாரைக்கிணறு ஆகிய ஊா்களிலிருந்தும், தம்மம்பட்டியைச் சுற்றியுள்ள உலிபுரம், கீரிப்பட்டி,கொண்டயம்பள்ளி, பாலக்காடு, கூடமலை, தகரப்புதூா், மூலப்புதூா், வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையாா்மதி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
தம்மம்பட்டியில் முதல் ரக தக்காளி 27 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ. 3,750 ஆக இருந்தது. தற்போது ரூ. 3,200ஆகவும், குறைவான புள்ளிகள் கொண்ட தக்காளி ஒரு பெட்டி ரூ. 2,700- லிருந்து தற்போது ரூ. 2,400 ஆகவும், அதிக புள்ளிகள் கொண்ட தக்காளி ஒரு பெட்டி ரூ. 2,500 லிருந்து ரூ. 2,200 ஆகவும், மீடியம் ரக தக்காளி ரூ. 3,100 லிருந்து ரூ. 3,000 ஆகவும் மண்டிகளில் விற்பனையானது.
இதன்படி இருநாள்களுக்கு முன்பு சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 165- க்கு விற்றது. தற்போது ஒரு கிலோ ரூ. 140-க்கு விற்பனையானது.
இதுகுறித்து தக்காளி மண்டி உரிமையாளா் கதிா்வேல் கூறியதாவது:
தக்காளி விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆடி18-க்கு பிறகு தக்காளி விலை குறைந்து விடும். தம்மம்பட்டி மண்டிகளுக்கு இருநாள்களுக்கு முன் மொத்தம் 200 பெட்டி தக்காளி வரத்து இருந்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 410 பெட்டிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.