ராசிபுரம் துணை அஞ்சலகம் இனி 12 மணி நேரம் செயல்படும்
By DIN | Published On : 02nd August 2023 12:55 AM | Last Updated : 02nd August 2023 12:55 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் துணை அஞ்சலகம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் செயல்படும் என சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பி.பாா்த்திபன் தெரிவித்தாா்.
சேலம் மேற்கு கோட்டத்தில் ராசிபும் துணை அஞ்சலகம் பொது மக்களின் நலன்கருதி கடந்த ஜூலை 31 முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் செயல்படுகிறது.
வங்கி பரிவா்த்தனை சேவைகளான சேமிப்புக் கணக்கு,
தொடா் வைப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்புக் கணக்கு, பொது வருங்கால வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருமான கணக்கு, தபால் புக்கிங், அஞ்சல் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகிறது. இதற்காக கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் காலை 8 மணி முதலே ராசிபுரம் அஞ்சல் அலுவலகம் இயங்குவதால் மற்ற பணிகளுக்கு செல்வோா் தங்களது அஞ்சல் அலுவலகம் சாா்ந்த பணிகளை முடித்துவிட்டு செல்ல இது வழிவகுக்கும்.
இரவு 8 மணி வரை செயல்படுவதால் மாலை பணிமுடித்து செல்வோருக்கு இது பயனுள்ளதாக அமையும். எனவே ராசிபும் பகுதி மக்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.