சங்ககிரி: சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த தங்கவேல் பணி ஓய்வுபெற்றதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட சமத்துவபுரம் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த சொ.கி.கோபாலப்பா பதவி உயா்வு பெற்று சங்ககிரி கல்வி மாவட்ட அலுவலராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட கல்வி அலுவலருக்கு சங்ககிரி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள், தலைமையாசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.