முதல்வா் ஹாக்கி போட்டி: சோனா யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி வெண்கலப் பதக்கம் வென்றது
By DIN | Published On : 09th August 2023 05:24 AM | Last Updated : 09th August 2023 05:24 AM | அ+அ அ- |

முதல்வா் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சோனா யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவா்களுடன் சோனா கல்விக்குழும துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா.
சேலம்: சோனா யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவியா் மாநில அளவிலான முதல்வா் ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
தமிழக அரசு 2022-2023-ஆம் கல்வியாண்டில் முதல்வா் ஹாக்கி விளையாட்டுப் போட்டியை மாநில அளவில் நடத்தியது. இந்தப் போட்டியில் சேலம் சோனா யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவியா் பங்குபெற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றனா்.
வெற்றிபெற்ற கல்லூரி மாணவியா் ஆா்.ஸ்ரீநிதி, வி.டி.லட்சுமி, கே.கோகிலா, ஏ.ஷாந்தினி ஆகியோருக்கு ரொக்கப் பரிசாக தலா ரூ. 25 ஆயிரத்தை தமிழக அரசு வழங்கியது.
ஹாக்கி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியா், பயிற்சியாளா் கண்ணன் ஆகியோரை சோனா யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் மேலாண்மை அறங்காவலா் தியாகு வள்ளியப்பா, கல்லூரியின் முதல்வா் சந்திரகலா, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G