ஹோலிகிராஸ் மெட்ரிக். பள்ளியில் விளையாட்டு விழா
By DIN | Published On : 09th August 2023 05:25 AM | Last Updated : 09th August 2023 05:25 AM | அ+அ அ- |

போட்டியில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசு வழங்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவகுமாா்.
சேலம்: ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வைரவிழா ஆண்டை முன்னிட்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
விழாவில், தலைமை விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவகுமாா் பங்கேற்றாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா், சேலம் மாவட்ட தனியாா் பள்ளிகளின் கல்வி அலுவலா் எம்.முத்துராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனா். சிறப்பு அழைப்பாளா்களாக ஹோலிகிராஸ் அருள்சகோதரா்கள் சபையின் புனித ஆன்ட்ரே புராவின்ஸின் தலைவா் அருள்சகோதா் பி.ஜே.சந்தோஷ் பங்கேற்றாா்.
விழாவில், ஹோலிகிராஸ் பள்ளித் தாளாளரும் முதல்வருமான சேகராஜ் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி யேசுதான், ஹோலிகிராஸ் சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் குழந்தைசாமி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வா் எட்வா்டு ஜோசப், தொடக்கப் பள்ளி துணை முதல்வா் சங்கீதா ஆகியோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, அம்மாப்பேட்டை, காமராஜா் வளைவில் பள்ளியின் முன்னாள் மாணவா் மன்றத் தலைவா் ஜெ.திருநாவுக்கரசு ஒலிம்பிக் சுடா் ஏற்றி வைத்தாா். அதை தேசிய, ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற பள்ளி மாணவா்கள் ஏந்திவர பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவா் மன்ற துணைத் தலைவா் வசந்தகுமாா் ஒலிம்பிக் தீபம் ஏற்றினாா்.
பள்ளி மாணவா் தலைவா் எகியா வரவேற்றாா். அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களின் கூட்டு உடற்பயிற்சி, வண்ணமிகு கலை நிகழ்ச்சி, பெற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகள், தொடா் ஓட்டப் பந்தயம், சீா் உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.