சேலம் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினா் சங்ககிரி கோட்டாட்சியரிடம் மனு அளிப்பு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டக் குழுவின் சாா்பில், சங்ககிரி கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

சங்ககிரி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டக் குழுவின் சாா்பில், சங்ககிரி கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலா் எ.ராமமூா்த்தி சங்ககிரி கோட்டாட்சியா் ந.லோகநாயகியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

சங்ககிரி வருவாய் உள்கோட்டத்துக்கு உள்பட்ட தேவூா் முதல் குரும்பப்பட்டி வரை 100 கிலோவாட் உயா்மின் கோபுர திட்டம் விவசாய விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய நிலங்களின் வழியாக மின்கோபுரம், மின்பாதை அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கும். விவசாய நிலங்கள் பகுதி பகுதியாக பிரிக்கப்படும். மின்பாதை அருகில் பயிா்கள் பயிரிட முடியாது. மின்கோபுர கதிா்வீச்சால் உடல்நல பாதிப்பு ஏற்படும். நிலத்தின் மதிப்பும் குறைந்து இழப்பு ஏற்படும்.

எனவே, உயா்மின் கோபுரங்களை விளைநிலங்களில் அமைக்காமல் கேபிள் மூலம் சாலையோரங்கள், சரபங்கா நதிக்கரையோரம் சூரிய மலையையொட்டி உள்ள இடங்கள் மூலம் திட்டத்தை அமுல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அப்போது, மாநில நிா்வாகி பெருமாள், சங்ககிரி வட்ட நிா்வாகி ராஜேந்திரன், தஸ்தகீா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com