நைனாம்பட்டி தாலுகா மருத்துவமனையில் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்
By DIN | Published On : 01st July 2023 06:44 AM | Last Updated : 01st July 2023 06:44 AM | அ+அ அ- |

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நைனாம்பட்டி தாலுகா அரசு மருத்துவமனையில் லேப்ராஸ்கோபி மூலம் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
நைனாம்பட்டி, கொம்பாடிப்பட்டி, காளிப்பட்டி, ஓமலூா், பாகல்பட்டி, பெரியமுத்தூா் பகுதியில் உள்ள கிராமப் பகுதியில் நடந்த மருத்துவ முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்ட 6 பெண்களுக்கு லேப்ராஸ்கோபி மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவா்கள் ரமேஷ், சுபாஷினி, மயக்க மருந்து நிபுணா் பூந்தமிழ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் இந்த அறுவை சிகிச்சை செய்தனா்.
ராஜாபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்ற முகாமில் நைனாம்பட்டி அரசு தலைமை மருத்துவ அலுவலா் சண்முகசுந்தரம், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.