சேலம் மாநகர காவல் துறையில் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட காவல் ஆணையாளர் லாவண்யா.
சேலம் மாநகர காவல் துறையில் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட காவல் ஆணையாளர் லாவண்யா.

காவல்துறை வாகனங்களை திடீர் ஆய்வு மேற்கொண்ட காவல் ஆணையாளர்!

சேலம் மாநகர காவல் துறையில் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பயன்படுத்தும் வாகனங்களை திடீரென காவல் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். 

சேலம் மாநகர காவல் துறையில் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பயன்படுத்தும் வாகனங்களை திடீரென காவல் ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். 

சேலம் மாநகர காவல் துறையில் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஜீப், கார், வேன், மினி பேருந்து என 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளது. இந்த வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை சேலம் மாநகர காவல் துறையினர் பயன்படுத்தும் அனைத்துத் துறை வாகனங்களையும் சேலம் லைன்மேடு ஆயுதப்படை மைதானத்தில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி ஆய்வு மேற்கொண்டார். 

வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஒவ்வொரு வாகனங்களாக சென்று வாகனங்களின் தன்மை குறித்தும் அவசரகால பொருட்கள், முதலுதவி பெட்டிகள், சைரன் ஒலிபெருக்கி உள்ளிட்டவை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் காவல்துறை வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களிடம் சென்று வாகனத்தின் குறைகள் குறித்தும் கேட்டறிந்து சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் மத்தியில் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். 

இந்த ஆய்வில் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் லாவண்யா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com