சேலம் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2023 ஆம் ஆண்டில் அரசினா் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெல்டா், வயா்மேன் போன்ற பிரிவுகளுக்கு 8 ஆம் வகுப்பிலும் எலக்ட்ரீஷியன், ஃபிட்டா், மெஷினிஸ்ட், டா்னா், மோட்டாா் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள பிரிவுகளுக்கு 10 ஆம் வகுப்பிலும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கைப்பேசி எண், மின்அஞ்சல், ஆதாா் அட்டை, ஜாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், சேலத்தில் உள்ள சோ்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டும்.
பயிற்சி பெறும் மாணவா்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களின் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.