மேட்டூா் அனல் மின் நிலைய குடியிருப்பில் திருட்டு

சேலம் மாவட்டம், மேட்டூா், தொட்டில்பட்டி பகுதியில் உள்ள மின் நிலைய குடியிருப்பில் திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து திருடிச் சென்றுள்ளனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா், தொட்டில்பட்டி பகுதியில் உள்ள மின் நிலைய குடியிருப்பில் திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து திருடிச் சென்றுள்ளனா்.

சேலம், பொன்னம்மாப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றிருந்த உதவி செயற்பொறியாளா் சந்திரகலாவின் வீட்டின் கதவை உடைத்து, வீட்டிலிருந்த 76 சவரன் தங்க நகைகள், ரூ. 9 லட்சம் ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

மேலும், அந்த குடியிருப்பில் பூட்டப்பட்டிருந்த ஐந்து வீடுகளின் பூட்டை உடைத்து வீடுகளில் இருந்த சிறு பொருள்களையும் கொண்டு சென்றுள்ளனா்.

கருமலைக்கூடல் போலீஸாா் மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் சம்பவ இடத்தில் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com