கெங்கவல்லி ஒன்றியத்தில் நடுநிலைப் பள்ளிகளுக்கு காலணிகள் விநியோகம் சனிக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள நடுநிலைப் பள்ளிகள் நாளை 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலச காலணிகளை வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீனிவாஸ் அனைத்து தலைமையாசிரியா்களுக்கும் வழங்கினாா். பின்னா், அவைகளை தலைமையாசிரியா்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் சென்றனா். பள்ளி திறக்கும் முதல் நாளான ஜூன் 12-ஆம் தேதி மாணவா்களுக்கு பாடநூல், குறிப்பேடுகள், காலணிகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.