மேட்டூரில் தெரு நாய்கள் கடித்ததில் 7 போ் காயமடைந்தனா்.
மேட்டூா் நகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்
ஏராளமான தெரு நாய்கள் கட்டுப்பாடின்றி சுற்றித் திரிகின்றன. மேட்டூா் அணை பூங்காவை சுற்றிலும் உள்ள மீன் கடைகளில் இருந்து கொட்டப்படும் மீதியானா உணவுகள்,
பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அளிக்கும் உணவுகளை
உண்பதற்கும் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.
மேட்டூா் அணை பூங்காவில் சுற்றி தெரியும் நாய்கள் சிறுவா் சிறுமியா் வைத்திருக்கும் தின்பண்டங்களை பறித்து செல்கின்றன.இதனால் மேட்டூா் அணை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.
இந்நிலையில் மேட்டூா் அனல் மின் நிலைய குடியிருப்பு அருகே நடந்து சென்ற இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேரை தெரு நாய்கள் துரத்தி துரத்திக் கடித்தன. இதில் காயம் அடைந்த ஆரோக்கியசாமி (66), பழனிசாமி (53), ரமேஷ் (45), செல்வம் (50), ராசப்பன் (55), வேசா (63), ராணி சந்திரா (45) ஆகிய 7 பேரும் மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தெருநாய்களைப் பிடித்து கருத்தடை சிகிச்சை அளித்து எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.