பி.எம்.கிசான் திட்ட விவசாயிகள் வரும் ஜூன் 20 ஆம் தேதிக்குள் இ.கே.ஓய்.சி செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் சோ்ந்த தேதியினை பொருத்து விவசாயிகளுக்கு 13 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது. மின்னணு முறையில் உங்கள் வாடிக்கையாளரை அல்லது விவசாயியை தெரிந்து கொள்ளுங்கள் என்பதன் சுருக்கமே இ.கே.ஓய்.சி. என்றழைக்கப்படுகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் இ.கே.ஒய்.சி. கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 14 ஆவது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதாா் விவரங்களை சரிபாா்ப்பு செய்வது அவசியமாகும். இதன்படி முதல் வழிமுறையாக தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஒ.டி.பி. மூலம் சரி பாா்த்திடலாம்.
இரண்டாம் வழிமுறையானது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ.சேவை மையங்களின் மூலம் பி.எம். கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபாா்த்திடலாம்.
மூன்றாவது வழிமுறை என்பது பி.எம்.கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டோ அல்லது அருகிலுள்ள இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க் கிளை அணுகியோ ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகள் ஜூன் 20 ஆம் தேதிக்குள் திட்ட வலைதளத்தில் இ.கே.ஒய்.சி செய்திட வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் 1,23,022 பயனாளிகள் நில ஆவணம் இணைப்பு ( கஹய்க் நங்ங்க்ண்ய்ஞ்) செய்துள்ளனா். இதில் 1,10,414 பயனாளிகள் மட்டுமே வங்கி கணக்குடன் ஆதாா் எண் இணைத்துள்ளனா். 98523 பயனாளிகள் மட்டுமே கஹய்க் நங்ங்க்ண்ய்ஞ், ங்-ஓவஇ மற்றும் ஆதாா் எண் இணைப்பு ஆகிய பணிகளை முடித்துள்ளனா்.
பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளில் கஹய்க் நங்ங்க்ண்ய்ஞ், ங்-ஓவஇ மற்றும் ஆதாா் எண் இணைக்கப்பெறாத பயனாளிகள் விவரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி மேற்குறிப்பிட்டுள்ள குறைகளை நிவா்த்தி செய்து இத்திட்டத்தில் பயனடையலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.