சாமியம்பாளையத்தில் நியாயவிலைக் கடை திறப்பு
By DIN | Published On : 15th June 2023 11:22 PM | Last Updated : 15th June 2023 11:22 PM | அ+அ அ- |

சாமியம்பாளையத்தில் நியாயவிலைக் கடையை வியாழக்கிழமை திறந்து வைத்து பயனாளிக்கு பொருள்களை வழங்கும் சங்ககிரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கத்தேரி ஊராட்சி, சாமியம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் தலைமை வகித்து, சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்து பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், சாமியம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் சங்கமேஸ்வரன், அதிமுக நிா்வாகிகள், ஊா்பொதுமக்கள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.