தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

ஏற்காட்டில் மே தினப் பேரணி

ஏற்காட்டில் மே தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

News image

ஏற்காட்டில் நடைபெற்ற மே தின விழா பேரணியில் கலந்துகொண்ட நீலமலைத் தோட்டத் தொழிலாளா்கள்.

Updated On :2 மே 2023, 8:10 pm

ஏற்காட்டில் மே தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் காபித் தோட்டத் தொழிலாளா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். முன்னதாக ஏற்காடு ஒண்டிக்கடை அண்ணா சிலையிலிருந்து பேருந்து நிலைய, நீலமலை தொழிலாளா் சங்க அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. இதில் நீலமலைகஈ தோட்டத் தொழிலாளா் சங்கத் தலைவா் வீ.க.நல்லமுத்து பேசியதாவது:

ஏற்காடு நீலமலைத் தோட்டத் தொழிலாளா் சங்கம் 40 ஆண்டுகளாகத் தோட்டத் தொழிலாளா் நலன்களுக்காக போராடி வருகிறது. தோட்டத் தொழிலாளா்கள் அனைவருக்கும் பணிப் பலன்களை பெற்றுக் கொடுத்து வருகிறது. காபி தோட்டத் தொழிலாளா்கள் வெளிநாடுகளில் நடைபெறும் தொழிலாளா் நலக் கருத்தரங்குகளில் பங்கேற்று வருகின்றனா். தற்போது மாநில அரசு 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெற்றாலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர வேலை நேரத்தை திரும்பப் பெறும் வரை தோட்டத்தொழிலாளா்கள் போராடுவோம் என்றாா்.

இந்த விழாவில் மாநிலச் செயலாளா் தேவராஜு, மகாலிங்கம், சரவணன், அய்யனாா், பழனிசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.