அப்பா பைத்தியம் சுவாமிகளின் 164-ஆவது பிறந்த நாள் விழா
By DIN | Published On : 12th May 2023 01:31 AM | Last Updated : 12th May 2023 01:31 AM | அ+அ அ- |

சேலம், சூரமங்கலம் அப்பா பைத்தியம் சுவாமிகளின் 164-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
சூரமங்கலம் அப்பா பைத்தியம் சுவாமிகளின் 164-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீா் வழிபாடு, விநாயகா் வழிபாடு, திருமகள் வழிபாடு மற்றும் சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் வேள்வி, பேரொளி வழிபாடுகள் நடைபெற்றன.
காலை 7.30 மணிக்கு ஞான விநாயகா், ஞான முருகா், அப்பா பைத்தியம் சுவாமிகள் ஆகியோருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மகா தீபாராதனையும், தொடா்ந்து அன்னமளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை நிா்வாகி முத்துமணி ராஜா செய்திருந்தாா்.