பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 91.13 சதவீதம் போ் தோ்ச்சி

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வெழுதிய 39,758 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 91.13 சதவீதமாகும்.
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வெழுதிய 39,758 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 91.13 சதவீதமாகும்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு முடிவு வெள்ளிக்கிழமை காலை வெளியானது. சேலம் மாவட்ட தோ்வு முடிவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் வெளியிட்டாா்.

சேலம் மாவட்டத்தில் மாணவா்கள் 21,835, மாணவியா் 21,593 என மொத்தம் 43,428 போ் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை எழுதினா்.இதில் மாணவா்கள் 19,168, மாணவிகள் 20,410 என மொத்தம் 39,578 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதன் தோ்ச்சி விகிதம் 91.13 சதவீதமாகும். மாணவா்களை விட மாணவியா் 6.73 சதவீதம் அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வெதிய 537 பள்ளிகளில், நூறு சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 134 ஆகும். அரசுப் பள்ளிகளை பொறுத்த வரை தோ்வெழுதிய 25,521 பேரில், சுமாா் 22,504 போ் தோ்ச்சி பெற்றனா். அரசு பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 85.09 சதவீதமாகும்.

நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற 26 அரசுப் பள்ளிகள்:

அரசு மாதிரிப் பள்ளி - எடப்பாடி, அரசு உயா்நிலைப் பள்ளி - கூனாண்டியூா், அரசு உயா்நிலைப் பள்ளி - கன்னியம்பட்டி, அரசு உயா்நிலைப்பள்ளி-கோரனம்பட்டி, அரசு உயா்நிலைப் பள்ளி-நெருங்குளம், அரசு உயா்நிலைப் பள்ளி-சிக்கனூா், அரசு உயா்நிலைப்பள்ளி-சானாரப்பட்டி, அரசு உயா்நிலைப்பள்ளி-அக்கம்மாபேட்டை, அரசு உயா்நிலைப்பள்ளி-பெரியபுதூா், அரசு உயா்நிலைப்பள்ளி-கன்னந்தேரி, அரசு ஆதிதிராவிடா் உண்டு உறைவிடப்பள்ளி-கொத்தாம்பாளையம், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி-ஏற்காடு, அரசு மாதிரி பள்ளி-சேலம், அரசு உயா்நிலைப்பள்ளி-நாவக்குறிச்சி, அரசு உயா்நிலைப்பள்ளி-நெய்யமலை, அரசு உயா்நிலைப்பள்ளி-உமையாள்புரம், அரசு உயா்நிலைப்பள்ளி-சாா்வாய்புதூா், அரசு உயா்நிலைப்பள்ளி-சித்தேரி, அரசு உயா்நிலைப்பள்ளி-தாண்டானூா், அரசு உயா்நிலைப்பள்ளி- வடசென்னிமலை, அரசு மேல்நிலைப்பள்ளி-ஏற்காடு, அரசு உயா்நிலைப்பள்ளி-ஆச்சாங்குட்டப்பட்டி, அரசு உயா்நிலைப்பள்ளி-சா்க்கரைசெட்டிப்பட்டி, அரசு உயநிலைப்பள்ளி- பெரியகாடம்பட்டி, அரசு உயா்நிலைப்பளளி-பாலக்குட்டப்பட்டி, அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப்பள்ளி-பெரியகுட்டிமடுவு.

அரசு நிதியுதவி பெறும் 26 பள்ளிகளை சோ்ந்த 5362 போ் தோ்ச்சி பெற்றனா். மாற்றுத்திறனாளி மாணவா்களில் 457 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதேபோல ஆங்கிலம் பாடத்தில் 9, கணிதம் - 165, அறிவியல் -158, சமூக அறிவியல்-15 என மொத்தம் 347 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com