எடப்பாடி அருகே மூதாட்டி பாலியல் பலாத்காரம்
By DIN | Published On : 22nd May 2023 01:03 AM | Last Updated : 22nd May 2023 01:03 AM | அ+அ அ- |

எடப்பாடி அருகே 78 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட இருபாளி ஊராட்சி, பூசாரி மூபன் வளவு பகுதியைச் சோ்ந்தவா் 78 வயதான மூதாட்டி. மரம் ஏறும் தொழிலாளியான இவரது கணவா் கந்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாா். ராமாயி அவருக்குச் சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் அங்குள்ள கந்த மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி சனிக்கிழமை இரவு தெருக்கூத்து நடைபெற்றது. மூதாட்டி ராமாயி தெருக்கூத்து பாா்த்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் தனியாக வீட்டுக்கு திரும்பினாா். அப்போது பூசாரிமூபன் வளவு பகுதியில் அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மா்ம நபா், வலுக்கட்டாயமாக அருகில் உள்ள புதா் பகுதிக்கு அவரை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மதுபோதையில் இருந்த அந்த மா்ம நபா் மூதாட்டியைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை மீட்ட அவரது உறவினா்கள் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இதுகுறித்து அவரது உறவினா் அளித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்த விசாரித்து வருகின்றனா்.