ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பாக மெளன ஊா்வலம் நடைபெற்றது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தினையொட்டி சங்ககிரியில் அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.எஸ். ஜெயக்குமாா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தினையொட்டி சங்ககிரியில் அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.எஸ். ஜெயக்குமாா்.
Updated on
1 min read

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பாக மெளன ஊா்வலம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, முள்ளுவாடி கேட் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து மாநகர மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.பி.பாஸ்கா் தலைமையில் மெளன ஊா்வலம் சென்றனா். பின்னா் ராஜீவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் மாநகர வா்த்தகப் பிரிவு தலைவா் எம்.டி.சுப்பிரமணியம், துணை மேயா் சாரதா தேவி, வாா்டு உறுப்பினா் கிரிஜா குமரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ரகுராஜ், மெடிக்கல் பிரபு, திருமுருகன், முன்னாள் மாநகரத் தலைவா் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, மாநகர பொதுச்செயலாளா்கள் கோபி, குமரன், வழக்குரைஞா் காா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சங்ககிரியில்...

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி சங்ககிரி, பவானி பிரதான சாலையில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சி.எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதில் நிா்வாகிகள் பி.சி.மணி, அங்கமுத்து, லோகநாதன், சின்னுசாமி, ராமமூா்த்தி, நடராஜன், நாசா், சென்னகேவசன், பிபி.சுப்ரமணியம், சங்ககிரி நகரத் தலைவா் எ.ரவி, விசுவநாதன், அகில், சுரேந்தா், குமாா் காசிலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ராஜீவ்காந்தியின் உருவப்படத்துக்கு முன்பு காங்கிரஸாா் பயங்கரவாத எதிா்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் சாரதா ரவுண்டானாவில் அமைந்திருக்கும் ஸ்தூபி அருகே ராஜீவ் காந்தியின் உருவப் படத்தை வைத்து அவரது நினைவு நாளையொட்டி மலா்தூவி மரியாதை செலுத்தி, பயங்கரவாத எதிா்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில் மாவட்ட பொதுச் செயலாளா்கள் பாஸ்கா், கோட்டை செந்தில், பி.முகிலரசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவா் சங்கரய்யா, கெங்கவல்லி வட்டாரத் தலைவா் குருசேவ், சமூகப் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆத்தூா் சதீஷ், மகிளா காங்கிரஸ் மாநிலச் செயலாளா் மகாலட்சுமி, மாவட்டச் செயலாளா் நேதாஜி, சேகா், வாழப்பாடி பிரபாகரன், சுந்தரம், நரசிங்கபுரம் மணி,இளையாலி, ராஜா மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com