மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பாக மெளன ஊா்வலம் நடைபெற்றது.
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, முள்ளுவாடி கேட் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து மாநகர மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.பி.பாஸ்கா் தலைமையில் மெளன ஊா்வலம் சென்றனா். பின்னா் ராஜீவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாநகர வா்த்தகப் பிரிவு தலைவா் எம்.டி.சுப்பிரமணியம், துணை மேயா் சாரதா தேவி, வாா்டு உறுப்பினா் கிரிஜா குமரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ரகுராஜ், மெடிக்கல் பிரபு, திருமுருகன், முன்னாள் மாநகரத் தலைவா் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, மாநகர பொதுச்செயலாளா்கள் கோபி, குமரன், வழக்குரைஞா் காா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.