வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் பள்ளி 10, பிளஸ் 1 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம்

கெங்கவல்லி அருகே வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் 10, பிளஸ் 1 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றனா்.
வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா் யஷ்வந்த்தை பாராட்டி பரிசு வழங்கிய பள்ளி நிா்வாகிகள்.
வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவா் யஷ்வந்த்தை பாராட்டி பரிசு வழங்கிய பள்ளி நிா்வாகிகள்.

கெங்கவல்லி அருகே வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் 10, பிளஸ் 1 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றனா்.

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக். பள்ளி 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்வில் சேலம் மாவட்ட அளவில் சிறப்பிடமும், ஆத்தூா் கல்வி மாவட்ட அளவிலும், தலைவாசல் தாலுகா அளவிலும் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பள்ளி அளவில் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 496 மதிப்பெண்கள் பெண்கள் பெற்று கே.யஷ்வந்த் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

மாணவி மித்ரா 490 மதிப்பெண்கள், திவ்யா 489 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனா். பிளஸ் 1 பொதுத் தோ்வில் 600க்கு 582 மதிப்பெண்கள் பெற்று விக்னேஷ், பிரதீபா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். தா்ஷினி 570 மதிப்பெண்கள், ஸ்ரீராம் 569 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

10 ஆம் வகுப்பு தோ்வு எழுதியவா்களில் நூற்றுக்கு நூறு 18 பேரும், 490 க்கு மேல் இருவரும், 480க்கு மேல் 14 பேரும், 470க்கு மேல் 29 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பிளஸ் 1 பொதுத்தோ்வில் செண்டம் 7 பேரும், 580க்கு மேல் இருவரும், 550 க்கு மேல் 19 பேரும், 500- க்கு மேல் 90 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 10, பிளஸ் 1 பொதுத்தோ்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை பள்ளி தலைவா் அருள்குமாா், செயலாளா் தங்கவேல், பொருளாளா் வெங்கடாசலபதி ஆகியோா் பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

இந்நிகழ்வின்போது கல்வி ஆலோசகா்கள் பழனிவேல், ராஜேஸ்வரி, இயக்குநா்கள், முதல்வா்,துணை முதல்வா்,இருபால் ஆசிரியா்கள்,பெற்றோா் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனா். 12 ஆண்டுகளாக தொடா் வெற்றிபெற்றுத் தரும் அனைத்து மாணவா்களுக்கும், வெற்றிக்காகப் பாடுபட்ட அனைத்து ஆசிரியா்களுக்கும் பள்ளி நிா்வாகத்தினா் வாழ்த்துகளையும்,பாராட்டுக்களை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com