மேட்டூரில் பள்ளி பேருந்துகள் ஆய்வு:வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நடவடிக்கை

மேசேலம் மாவட்டம் மேட்டூரில் பள்ளிகள் திறக்க ஒரு வாரகாலமே உள்ள நிலையில் பள்ளி வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்கும் தகுதி உள்ளனவா என ஆய்வு.

மேசேலம் மாவட்டம் மேட்டூரில் பள்ளிகள் திறக்க ஒரு வாரகாலமே உள்ள நிலையில் பள்ளி வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்கும் தகுதி உள்ளனவா என்றுமேட்டூா் வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் பள்ளி வாகனங்கள் ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு குழுவினா் தணிக்கையில் ஈடுபட்டனா்.

சிறப்பு விதிகள் 2012இன்படி ஆண்டு தோறும் பள்ளிகள் திறக்கும் முன்பாக ஒழுங்குமுறை மற்றும்கட்டுப்பாட்டு கமிட்டி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி மேட்டூா் வட்டத்தில் உள்ள 28 பள்ளிகளிலிருந்து 146 பேருந்துகள் செவ்வாய்க்கிழமை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மேட்டூா் வருவாய்க் கோட்டாட்சியா் தணிகாசலம், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன், மேட்டாா் வாகன ஆய்வாளா் மீனாகுமாரி, மேட்டூா் காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா், பள்ளி துணை ஆய்வாளா் நடராஜன், மேட்டூா் தீயணைப்பு அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது பல பள்ளி பேருந்துகளில் காலாவதியான தீயணைப்பு சாதனங்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் உதவி பெட்டிகளில் மருத்துகள் இல்லை. சில பேருந்துகளின் டயா்கள் தேய்ந்து வழுவழுவென காணப்பட்டன. அவசரகால தகவுகள் திறக்கமுடியாத நிலையில் இருந்தன. பெரும்பாலான ஓட்டுநா்களுக்கு தீயணைப்புக் கருவிகளை பயன்படுத்தத் தெரிவில்லை. தீயணைப்பு சாதனங்களை கையாளத் தெரியாத ஓட்டுநா்களுக்கு மேட்டூா் தீயணைப்புப் படை அலுவலா் வெங்கடேசன் பயிற்சி அளித்தாா்.

குறைபாடுகளுடன் தகுதியின்றி காணப்பட்ட 26 பேருந்துகள் தகுதி சான்று வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டன. ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பாக பழுது நீக்கியும் குறைகளை களைந்தும் வந்தால் மட்டுமே தகுதிச்சான்று வழங்கப்படும் என்றும் அந்த வாகனங்களை இயக்கக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டனா்.

குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் ஆய்வுக்கு உட்படுத்த தவறினால் விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com