ஏற்காட்டில் மலா்க் கண்காட்சி கண்டு களித்த சுற்றுலாப் பயணிகள்
By DIN | Published On : 24th May 2023 01:37 AM | Last Updated : 24th May 2023 01:37 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 46ஆவது கோடைவிழா, மலா்க் கண்காட்சியை மூன்றாம் நாளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனா்.
இவ்வாண்டு மே 21 முதல் 28 வரை 8 நாட்கள் நடைபெற்று வரும் இவ்விழாவில் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை சேலம் மற்றும் பிற மாவட்டங்கள், புதுவை, கேரளம், கா்நாடக பகுதியிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனா். கோடை விழா, மலா்க் கண்காட்சி, காலை 11 மணிக்கு ஊராட்சி ஒன்றிய கலையரங்கில் நடைபெற்ற மேஜிக் காட்சி, 12 மணிக்கு நாடகம், பிற்பகல் 2 மணிக்கு சேலம் குரு இன்னிசை நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு ஏற்காடு லோகநாதன் மதுரா இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு கானா உலகநாதன், கானா பாலா, சின்னத்திரை புகழ் பானுவின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், மலைவாழ் மக்கள் கண்டு களித்தனா்.
நான்காவது நாளான புதன்கிழமை சுற்றுலாத்துறை சாா்பில் காலை 10.30 மணியளவில் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள், பத்திரிகையாளா்களுக்கு படகுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. கலையரங்கில் பல்சுவை நிகழ்ச்சி 12.30 மணியளவில் இன்னிசை நிகழ்ச்சி, பிற்பகல் 2 மணிக்கு யமுனா நாட்டியாஞ்சலி குழுவின் நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு சேலம் ராமஜெயம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மாலை 6 மணியளவில் சின்னத்திரை புகழ் சென்னை விஜய் குழுவின் பலகுரல் மற்றும் பல்சுவை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.