சேலம் மாநகரில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் போக்குவரத்துத் திட்டமிடல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
சேலம், அழகாபுரத்தில் உள்ள வடக்கு போக்குவரத்து காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகரக் காவல் ஆணையா் பா.விஜயகுமாரி, போக்குவரத்து திட்டமிடல் பிரிவைத் தொடங்கிவைத்தாா்.
இந்தப் பிரிவு காவலா்கள் மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்தும், பள்ளிகள் அருகே வேகத்தடை அமைப்பது குறித்தும் ஆய்வு செய்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பாா்கள்.
இந்தத் தகவல்கள் ஆட்சியா் அலுவலகத்தின் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் வடக்கு மாநகரக் காவல் துணை ஆணையா் கெளதம் கோயல், கூடுதல் துணை ஆணையா் எம்.ரவிச்சந்திரன் (ஆயுதப் படை) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.